கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நாளை முதல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படலாம் ஆனால் பார்களுக்கு அனுமதி இல்லை.எனினும் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது

Tags: