#BREAKING:- மகேஷ் பாபு அண்ணன் ரமேஷ் பாபு காலமானார்..!!
#BREAKING:- மகேஷ் பாபு அண்ணன் ரமேஷ் பாபு காலமானார்..!!
தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நாயகனாகவும், அதிரடி கதாநாயகனாகவும் இருப்பவர் மகேஷ் பாபு. இவரது அண்ணன் ரமேஷ் பாபு கட்டமனேனி உடல்நல குறைவால் சற்று முன் காலமானார்.
தெலுங்கு சினிமாவைப் பொறுத்தவரையில், பெரிய ஸ்டார்கள் பட்டியலில் கிருஷ்ணாவின் பெயர் தவறவிட முடியாதது. அந்த அந்தஸ்து, இப்போது அவர் மகனான மகேஷ் பாபு வரை தொடர்கிறது.மகேஷ் பாபு அண்ணன் ரமேஷ் பாபு கட்டமனேனி, முதலில் சில படங்களில் நடித்தார். அதன் பிறகு 1997 ஆம் ஆண்டு நடிப்பதை விட்டுவிட்டு தந்தையின் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி படத் தயாரிப்பு வேலைகளில் இறங்கிவிட்டார். குணசேகர் இயக்கி இவரின் தம்பி மகேஷ் பாபு நடித்த `அர்ஜுன்' படத்தைத் தயாரித்ததோடு சரி. அதன் பிறகு இணை தயாரிப்பு, வெளியீடு செய்து வந்தார்.
ரமேஷ் பாபு கட்டமனேனி அவர்கள் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் காலமானார். இவருக்கு வயது 56.இவரது மறைவிற்கு ரசிகர்கள் பிரபலங்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன், மகேஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அதனால் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.