#BREAKING:- தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் காலமானார் !! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

#BREAKING:- தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் காலமானார் !! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

Update: 2021-06-14 12:58 GMT

பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் சற்று முன் காலமானார். 

பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் 'ரங்கப்பா ஹோபிட்னா', 'தசவலா', 'ஹரிவு', 'கில்லிங் வீரப்பன்', 'நானு அவனல்ல அவளு உள்ளிட்ட பல கன்னட படங்களில் நடித்துள்ளார். 'நானு அவனல்ல.. அவளு' படத்தில் திருநங்கை யாக நடித்ததற்காக தேசிய விருதை பெற்றவர் இவர்.

நடிகர் சஞ்சாரி விஜய் தனது நண்பரின் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் பெங்களூரில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் அவர் தலையிலும் தொடையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.  இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகக் இன்று காலை கூறப்பட்ட நிலையில் சற்று முன் காலமானார்.

இந்த செய்தி அறிந்த ரசிகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர் 

Tags:    

Similar News