#BREAKING: திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி! கனிமொழிக்கு கொரோனா!
#BREAKING: திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி! கனிமொழிக்கு கொரோனா!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தி.மு.க.வுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நேற்று திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் வீட்டிலும், முக்கிய பிரமுகர்கள் வீட்டிலும் அதிரடியாக வருவமான வரிதுறையினர் ரெய்டு நடத்திய நிலையில், இன்று திமுக எம்.பி.,யும் மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் பிரச்சார கூட்டங்களில் சமூக இடைவெளியும், முககவசம் அணியும் வழக்கமும் பின்பற்றப்படுவதில்லை. பொதுமக்களும் சரி, அரசியல் தலைவர்களும் சரி இது குறித்து தொண்டர்களை எச்சரிப்பதும் கிடையாது. இந்நிலையில், பல கட்சிகளின் வேட்பாளர்களும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென் தமிழகத்தின் பல இடங்களில் திமுக வேட்பாளர்களுக்காக தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த கனிமொழிக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்ததையடுத்து, பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதியானது. இதனையடுத்து, வீட்டில் அவர் தனிமைபடுத்தி கொண்டு உள்ளார். கனிமொழியுடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த தலைவர்கள், வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.