#BREAKING: தேர்தலில் போட்டியில்லை...! செல்லூர் ராஜூ செம ரகளை! இப்படியெல்லாமா காமெடி செய்வாங்க!

#BREAKING: தேர்தலில் போட்டியில்லை...! செல்லூர் ராஜூ செம ரகளை! இப்படியெல்லாமா காமெடி செய்வாங்க!

Update: 2021-03-27 06:59 GMT

 

தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தற்போதே விலகிக் கொள்ள தயார் என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு  தெரிவித்துள்ளார்.

மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பெத்தானியாபுரம் பகுதியில் அதிமுக வேட்பாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் ராஜூ வீதி வீதியாகச் சென்று பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது மக்களிடையே பேசிய அமைச்சர் அதிமுக அரசு ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்த அனைத்து திட்டங்களையும் செய்துள்ளதாகவும், ஒவ்வொரு வீட்டிற்கும் 100 யூனிட் மின்சாரம் வழங்கி வருவதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் பட்டா வழங்குவதற்கு பணம் பெற்றதாக தன் மீது மதுரை மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சின்னம்மாள் குற்றச்சாட்டியுள்ளார் என்றும், ஆனால் அதில் உண்மை இல்லை என தெரிவித்தார்.

தாம் முறைகேடு , ஊழல் செய்தது இல்லை என்றும் அப்படி செய்ததாக நிரூபித்தால் இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்ளவும் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால் இப்போது அவரே நினைத்தாலும் தேர்தலில் இருந்து விலக முடியாது.

ஏனென்றால் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் முடிந்துவிட்டது. அதற்கு பிறகு தான் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனால் அமைச்சர் செல்லூர் ராஜூ காமெடி செய்து வருவதாக பல்வேறு தரப்பினரும் கலாயத்து வருகின்றனர்.

மேலும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் தமிழகத்தில் பரப்புரை மேற்கொள்ள வரவேண்டாம் எனவும் அக்கட்சியினர் மீது தமிழக மக்கள் மிகுந்த கோபத்தில் இருப்பதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு எழுதியது போன்ற ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது .

அது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், முதல்வருக்கு நான் எதற்கு கடிதம் எழுத வேண்டும் , நேரிலேயே பேசிவிடுவேன் , அந்த கடிதத்தில் தனது கையொப்பம் இல்லை, அப்படி ஒரு கடிதத்தை தாம் எழுதவில்லை என தெரிவித்தார்.

newstm.in

Tags:    

Similar News