#BREAKING: 24 மணி நேரத்திற்குள் ஆபாச படங்களை நீக்க வேண்டும்! ஓடிடி தளங்களுக்கு அதிரடி உத்தரவு!
#BREAKING: 24 மணி நேரத்திற்குள் ஆபாச படங்களை நீக்க வேண்டும்! ஓடிடி தளங்களுக்கு அதிரடி உத்தரவு!
கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த கால கட்டத்தில் ஓடிடி தளங்களுக்கு பெரிய அளவில் நாடு முழுவதுமே வரவேற்பு இருந்து வந்தது. அனைத்து மொழி திரைப்படங்களுமே தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்ததால், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட ஒடிடி தளங்களில் நேரடியாக வெளியாகி பெரும் வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றிருந்தன.
விஞ்ஞான வளர்ச்சி ஒரு பக்கம் நல்ல விஷயங்களுக்குப் பயன்பட்டு வந்தாலும், இரு புறமும் பிடியில்லாத கத்தியைப் போன்றே அதன் இன்னொரு பக்கம் அழிவு பாதைக்கு அழைத்துச் செல்வதாகவே இருந்து வருகிறது. ஓடிடி தளங்களுக்கு சென்சார் விதிமுறைகள் இல்லாத காரணத்தினால், இந்த தளங்களுக்கு படங்களை எடுப்பவர்கள், ஆபாச குப்பைகளையும், வன்முறை காட்சிகளையும் சேர்த்தே விற்கத் துவங்கினர்.
ஊரடங்கு காலத்தில், நாடு முழுவதுமே கிட்டத்தட்ட வீட்டிற்கு ஒரு மாணவனோ, மாணவியோ தங்களது பாடங்களை ஆன்லைன் மூலமாகவே மொபைல், லேப்-டாப் போன்ற சாதனங்களின் மூலமாக பயின்று வந்தனர். இவர்கள் இந்த ஆபாச குப்பைகளைப் பார்த்து அவர்களது எதிர்காலத்தை சீரழித்துக் கொள்ளும் அபாயமும் இருப்பதாக பன்னெடுங்காலமாகவே சமூக ஆர்வலர்களிடம் இருந்து குரல்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
ஓடிடி இயங்குதளங்களில் ஒளிப்பரப்பபடும் சில சீரியல்கள் கூட திரைப்படங்களை விட பெரும் ஆபாச குப்பைகளாகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் இருக்கின்றன. ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்ட திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் பத்திரிகை கவுன்சில் சட்டம், கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் சட்டம் அல்லது தணிக்கை வாரியத்தின் கீழ் வரவில்லை. எனவே, ஓடிடி படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.
அமேசான் பிரைமில் வெளியான 'தாண்டவ்' வெப் சீரிஸ் இந்து மதக் கடவுளை இழிவுபடுத்துவதாக கோரிக்கைகள் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட ஒடிடி தளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பார்வையாளர்கள், ஒளிப்பரப்பாகும் வீடியோ குறித்து புகார் அளித்த 24மணி நேரத்தில் ஆபாச படங்களை சமுகவலைதளங்கள் நீக்க வேண்டும் என்றும், அரசு, நீதிமன்றங்கள் தகவல்களை கேட்டால் சமூக வலைதளங்கள் தர வேண்டும் என்றும் வன்முறை துண்டும் விதமான கருத்துகளை தணிக்கை செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.