#BREAKING இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் !! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!
#BREAKING இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் !! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளாக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பிசிசிஐ-ஆல் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார்.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான வீரர்களில் ஒருவர் ராகுல் டிராவிட். இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளிலும் டிராவிட்க்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருகிறார்.
தற்போது பெங்களூருவில் செயல்படும் தேசிய கிரிக்கெட் அகடாமியின் தலைமை பொறுப்பாளராக உள்ளார். இந்தியாவுக்கான இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி, எதிர்கால இந்திய அணியை வலுப்படுத்தும் பொறுப்பு இந்த அகாடமிக்கு உண்டு. அந்தப் பதவிக்கு ராகுல் டிராவிட் வந்தபின் ஏராளமான துடிப்புமிக்க இளம் வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்தனர்.
இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் வரும் டி20 உலகக் கோப்பை போட்டியுடன் நிறைவடைகிறது. ரவி சாஸ்திரியின் பதவி காலத்தை நீடிக்க பிசிசிஐ விரும்பவில்லை.
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு ராகுல் டிராவிட் அண்மையில் விண்ணப்பித்தார். தற்போது இவரது விண்ணப்பத்தை ஏற்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை பிசிசிஐ அறிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும் ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பார் எனவும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.
ஏற்கனவே டிராவிட் 19 வயதுக்குட்பட்ட மற்றும் இந்திய ஏ அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது ரிஷப் பந்த், ஷுப்மன் கில், ஆவேஷ் கான், பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி போன்ற இளம் வீரர்கள் வளர்த்தெடுக்கப்பட்டனர்.
newstm.in