#BREAKING:- புதுச்சேரியில் அனைத்து ரேஷன்கார்டுக்கும் ரூ.3000 கொரோனா நிவாரண நிதி !!

#BREAKING:- புதுச்சேரியில் அனைத்து ரேஷன்கார்டுக்கும் ரூ.3000 கொரோனா நிவாரண நிதி !!

Update: 2021-05-26 12:15 GMT

தமிழகத்தில் கொரோனாவின் 2ஆவது அலை மிகத்தீவிரமாக பரவி வரும் நிலையில், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் தொற்றின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அங்கு குறைந்த அளவில் இருந்த பாதிப்பு அண்மைக்காலமாக அதிகரிதது வருகிறது. நாள்தோறும் 2000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால்  புதுச்சேரியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கால் மதியம் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள் மட்டும் இயங்கி வருகிறது. கொரோனா ஊரடங்கால் அன்றாட கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று சட்டசபைக்கு வந்த முதல்வர் ரங்கசாமி ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமாக அனைத்து ரேஷன்கார்டுக்கும் ரூ.3000 வழங்க அனுமதிக்க வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த கோப்புக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார்.இதன் மூலம் 3,50,000குடும்பங்கள் பயன்பெறும் என அறிவித்தார்.

Tags:    

Similar News