#BREAKING:- மருத்துவமனையில் சச்சின் அனுமதி !! அதிர்ச்சியில் ரசிகர்கள்

#BREAKING:- மருத்துவமனையில் சச்சின் அனுமதி !! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Update: 2021-04-02 14:01 GMT

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்ட சச்சின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

கடந்த மார்ச் 27 ஆம் தேதி சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனாவின் லேசான அறிகுறி இருந்துள்ளது. இதனையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதை அடுத்து அவர் தனது வீட்டிலேயே தனிப்படுத்திக்கொண்டார். எனினும் தனது குடும்பத்தில் வேறு யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்றும் சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டார். 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட சச்சின் 6 நாட்களுக்கு பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. மருத்துவ ஆலோசனையின் கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.


newstm.in
 

Tags:    

Similar News