#BREAKING : பசும்பொன் மக்கள் ‌ கழக நிறுவனர் ச.இசக்கி முத்து காலமானார்!

#BREAKING : பசும்பொன் மக்கள் ‌ கழக நிறுவனர் ச.இசக்கி முத்து காலமானார்!

Update: 2021-04-23 12:58 GMT

பசும்பொன் மக்கள் ‌ கழக நிறுவனர் ச.இசக்கி முத்து இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் சார்பில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, தேவர் சமுதாயத்தினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடியையும், துணை முதல்வரையும் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார் இசக்கி முத்து. 

தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள முக்குலத்தோர் சமுதாயம், ஏழை எளிய பின்தங்கிய சமூதாயம் என்றும், கல்வி, வேலைவாய்ப்பில் முக்குலத்தோர்  சமூதாயத்திற்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார் இசக்கி முத்து.

இந்நிலையில், உடல் நலக்குறைவால் இன்று காலை பசும்பொன் மக்கள் கழக நிறுவனர் இசக்கி முத்து காலமானார்.

Tags:    

Similar News