#BREAKING பிரபல நடிகர் திடீர் மரணம்.. பெரும் சோகத்தில் தமிழ் திரையுலகம் !!

#BREAKING பிரபல நடிகர் திடீர் மரணம்.. பெரும் சோகத்தில் தமிழ் திரையுலகம் !!

Update: 2021-05-12 09:16 GMT

பிரபல திரைப்பட துணை நடிகர் மாறன். 2004ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் நடித்தவர் துணை நடிகர் மாறன். ஆதிவாசி என்ற கேரக்டரில் அந்த படத்தில் நடித்தார். பின்னர் டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் . வில்லன் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், கானா பாடல்களையும் மேடை கச்சேரிகளில் பாடி வந்துள்ளார்.

செங்கல்பட்டில் வசித்து வந்த இவருக்கு கடந்த சில நாடகளுக்கு முன் கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டது. இதையடுத்து அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஏற்பட்ட நடிகர் மாறனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு  துணை நடிகர் மாறன் உயிரிழந்தார். அவருக்கு வயது 48.

கொரோனா தொற்றால் திரையுலகினர் அடுத்தடுத்து மரணம் அடைவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newstm.in

Tags:    

Similar News