#BREAKING டி20 உலகக்கோப்பை: இந்தியா முதலில் பேட்டிங் !! நியூசிலாந்து உடன் வாழ்வா சாவா போட்டி.. ஏன்?
#BREAKING டி20 உலகக்கோப்பை: இந்தியா முதலில் பேட்டிங் !! நியூசிலாந்து உடன் வாழ்வா சாவா போட்டி.. ஏன்?
டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றில், ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் கடந்த 24ஆம் தேதி மோதியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் இன்று துபாயில் நடக்கும் ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் வெற்றிபெறும் அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும். தோல்வியடைந்தால் அரையிறுதி வாய்ப்பு மங்கும். இதனால் இந்திய அணிக்கு இது வாழ்வா சாவா போட்டியாக கருதப்படுகிறது. நியூசிலாந்து அணியும் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளதால், இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த நிலையில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், புவிக்குப் பதிலாக இஷான் கிஷன், ஷர்துல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்கும் பட்சத்தில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கும் என கருதப்படுகிறது.
newstm.in