#BREAKING:- புத்தாண்டு கொண்டாட தடை - தமிழக அரசு..!!

#BREAKING:- புத்தாண்டு கொண்டாட தடை - தமிழக அரசு..!!

Update: 2021-12-13 20:43 GMT

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால், உருமாறியுள்ள ‘ஒமைக்ரான்’ பற்றிய அச்சம் இன்னும் விலகவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வருகிற 15-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த டிசம்பர் 31  மற்றும் ஜனவரி 1  ஆம் தேதி இரண்டு நாட்களுக்கு கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு அனுமதி இல்லை.சமுதாய, அரசியல் கூட்டங்கள், கலாச்சார நிகழ்வுகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கான தடை தொடரும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது 

Similar News