#BREAKING:- 'டார்ஜான்' நடிகர் விமான விபத்தில் மரணம் !!
#BREAKING:- 'டார்ஜான்' நடிகர் விமான விபத்தில் மரணம் !!
"டார்சன் இன் மன்ஹாட்டனில்" டார்சானாக நடித்த நடிகர் ஜோ லாரா விமான விபத்தில் காலமானார்.இவருக்கு வயது 58.
Tarzan,Baywatch,Deathgame உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் ஜோ லாரா, அமெரிக்காவின் டென்னசி விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்றில் 7 பேருடன் புறப்பட்டு சென்றார். புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பெர்சி பிரைஸ்ட் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 7 பேரும் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர். விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் அமெரிக்காவின் பிரபல நடிகர் ஜோ லாரா மற்றும் அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா ஆகியோரும் அடங்குவர்.
இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.