#BREAKING:- இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா…!!

#BREAKING:- இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா…!!

Update: 2021-07-07 15:09 GMT

2019ம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது பாஜக; இதையடுத்து, இரண்டாவது முறையாக பிரதமர் ஆசனத்தில் அமர்ந்தார் நரேந்திர மோடி. அப்போது தேர்வுசெய்யப்பட்ட அதே அமைச்சரவைதான் இப்போது வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. அமைச்சரவையில் மொத்தம் 57 அமைச்சர்கள் இருந்தனர். அதில் இரண்டு பேர் மரணம் அடைந்தனர்; இரண்டு பேர் பதவி விலகினர்.

ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல் உள்ளிட்ட முக்கியமான அமைச்சர்கள் மூன்று, நான்கு துறைகளைச் சேர்த்து கவனித்துக் கொள்கின்றனர். இதனால் அவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. அமைச்சரவையில் தற்போது 53 பேர் இருக்கின்றனர். அமைச்சரவையில் மொத்த பலம் 81. ஆகவே, 28 பதவிகள் காலியாக உள்ளன.



இவற்றை நிரப்பவும், அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரவும் பிரதமரும், கட்சித் தலைமையும் ஆலோசித்து வந்தது. அதேபோல ஒருசில அமைச்சர்களின் செயல்பாடுகளும் கட்சித் தலைமைக்கும் பிரதமருக்கும் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இச்சூழலில் நேற்று, சமூகநீதித் துறை அமைச்சராக இருந்த தாவர்சந்த் கெலாட் கர்நாடகா ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது, கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலும், தொழிலாளர்நலத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வாரும் ராஜினாமா செய்துள்ளனர். இதனால், அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News