#BREAKING:- அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி !!
#BREAKING:- அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி !!
இந்தியாவில் தற்போது பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்சின்’ தடுப்பூசி மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் உருவாக்கிய ‘கோவிஷீல்ட்’ ஆகிய 2 தடுப்பூசிகளும் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ரஷ்யாவின் ‘ஸ்பூட்னிக்-வி’ தடுப்பூசி பயன்பாட்டிற்கும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ்க்கு எதிராக சர்வதேச அளவில் உருவாக்கப்பட்ட பைசர் மற்றும் மாடர்னா போன்ற தடுப்பூசிகளை அங்கீகரிப்பதற்கான செயல்முறைகளை விரைவுபடுத்தியிருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் கோவிட் பணிக்குழு தலைவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் மருந்து நிறுவனமான பைசர், இந்தியாவில் தனது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் பெறுவதற்கான இறுதி கட்டத்தில் இருப்பதாக கடந்த வாரம் தெரிவித்தது.
இந்நிலையில், அமெரிக்க நிறுவன தயாரிப்பான மாடர்னா கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்திற்கு மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மாடர்னா தடுப்பூசி RNA தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இது தொற்றுநோயைத் தடுப்பதில் 90 சதவீதத்திற்கும் அதிகமான செயல்திறனைக் கொண்டுள்ளது என கூறப்படுகிறது.மாடர்னா மருந்தை -20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் ஆறு மாதங்கள் வரை சேமித்து வைக்க முடியும்.