#BREAKING: சென்னை மக்களுக்கு எச்சரிக்கை!

#BREAKING: சென்னை மக்களுக்கு எச்சரிக்கை!

Update: 2021-03-18 16:28 GMT

உலகம் முழுவதுமே கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலை பரவி வருவதாக பீதியைக் கிளப்பி வருகிற நிலையில், நாளுக்கு நாள் தமிழகத்திலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. நம் தமிழகம் உட்பட, மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா என பல மாநிலங்களில் தற்போது கொரோனா பரவல் தினந்தோறும் அதிகரித்து வருகிறது.பல  மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் பலரும் முககவசம் அணியாமல் கலந்துக் கொள்வது கொரோனா பரவலுக்கு காரணமாக அமையும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் தமிழகத்தின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் கொரோனா பரவல் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிப்புக்குள்ளானவர்கள் ஒரே பகுதியில் மூன்று நபர்கள் இருந்தாலே அந்த பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் குறிப்பிட்ட ஒரு தெருவிலோ அல்லது ஏதேனும் ஒரு குடியிருப்புகளிலோ மூன்று பேர்களுக்கு மேல் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்தால், அந்த பகுதியை, நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து, அந்த பகுதியில் வசிப்பவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, திருச்சி என்று பல மாவட்டங்களில் தற்சமயம் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும். முக கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். ஊரடங்கு காலத்தில், நடைமுறைப்படுத்திய, கை, முகத்தை வீட்டை விட்டு வெளியே சென்று வந்ததும் கழுவுவதை  மீண்டும் நடைமுறைப்படுத்துங்கள். கூட்டங்களில் கலந்து கொள்ளாதீர்கள். பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருங்கள்.
 

Tags:    

Similar News