#BREAKING எஸ்பிஐ வங்கியின் சர்ச்சை அறிவிப்பு வாபஸ்!!

#BREAKING எஸ்பிஐ வங்கியின் சர்ச்சை அறிவிப்பு வாபஸ்!!

Update: 2022-01-29 16:42 GMT

3 மாதத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் பணிக்கு சேர்க்கப்பட மாட்டார்கள் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

புதிய பணியாளர் சேர்க்கை மற்றும் பதவி உயர்விற்கான மருத்துவ தகுதி வழிகாட்டு விதிகளை பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் வெளியிட்டது. அதில் ஒரு பெண் 3 மாதத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணியாக இருந்தால் அவர் பணியில் சேர தகுதியில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.

இது போன்றவர்கள் குழந்தை பெற்ற பின் 4 மாதம் கழித்தே பணியில் சேர தகுதியுள்ளவர்கள் என்றும், பதவி உயர்விற்கும் இதே விதி பொருந்தும் என வங்கி நிர்வாகம் தெரிவித்தது.

ஏற்கனவே இருந்த வழிகாட்டுதலில், ஆறு மாத காலம் வரை கர்ப்பமாக இருக்கும் பெண்கள், வங்கியில் வேலை செய்வது கருவின் வளர்ச்சியில் எந்த பாதிப்பை ஏற்படுத்தாது என்று தகுந்த மருத்துவரின் சான்றிதழ் சமிர்பித்தால் பணியில் அமர்ந்தலாம் என்று கூறியது.

இதில் திருத்தம் கொண்டுவரப்பட்டது பல்வேறு தரப்பில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. திருத்தப்பட்ட வழிக்காட்டுதல் பாகுப்பாடு நிறைந்தது என்று அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் தெரிவித்தது. இது பெண்கள் உரிமையை பறிக்கும் செயல் என ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.


மதுரை சு.வெங்கடேசன் பலரும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தனது சுற்றறிக்கையை திரும்பப் பெற்றுள்ளது. இது பாலின சமத்துவத்திற்கு கிடைத்த வெற்றி என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். பாலின நிகர் நிலைப் பார்வையோடு குரல் கொடுத்த எல்லோருக்கும் பாராட்டும், நன்றியும் என அவர் தெரிவித்துள்ளார்.


இவ்விதி 13 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வரப்பட்டு கடும் எதிர்ப்பு காரணமாக திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் தற்போதும் கொண்டுவரப்பட்டு எதிர்ப்பு காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.

newstm.in

Similar News