#BREAKING டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்திடம் 110 ரன்களுக்கு சுருண்ட இந்தியா? ரசிகர்கள் அதிர்ச்சி !!
#BREAKING டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்திடம் 110 ரன்களுக்கு சுருண்ட இந்தியா? ரசிகர்கள் அதிர்ச்சி !!
டி20 உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்தது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் களமிறங்கியது.
கே.எல். ராகுல், இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 3-வது ஓவரை டிரென்ட் பவுல்ட் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் இஷான் கிஷன் ஆட்டம் இழந்தார். அவர் 8 பந்தில் 4 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து ரோகித் சர்மா களம் இறங்கினார். டிரென்ட் பவுல்ட் வீசிய கடைசி பந்தை ரோகித் சர்மா எதிர்கொண்டார். இந்த பந்தை டிரென்ட் பவுல்ட் ஷார்ட் பிட்ச் பவுன்சராக வீசினார். ரோகித் சர்மா லெக் சைடு ஹூக் ஷாட்டாக விளாசினார். ஆனால் பந்து பவுண்டரி லைனுக்கு வெளியில் செல்லாமல் ஆடம் மில்னே கைக்கு சென்றது. எளிதாக பிடிக்க வேண்டிய கேட்ச்-ஐ மில்னே கோட்டைவிட்டார். இதனால் ரோகித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட்டாவதில் இருந்து தப்பினார்.
ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கினால், அதன்பின் ருத்ர தாண்டவம் ஆடுவார் என்பது வழக்கமான ஒன்று. ஆனால் இன்று 14 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். கே.எல்.ராகுல் 18 (16) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
இந்திய வீரர்கள், நியூசிலாந்து பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். அடுத்ததாக ரோகித் சர்மா 13 ரன்களிலும், கேப்டன் விராட் கோலி 9 (17) ரன்னிலும், ரிஷப் பண்ட் 12 (19) ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இதனால் அதன்பின்னர் வந்த ஹர்திக் பாண்ட்யா 23 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஜடேஜா கடைசி வரை களத்தில் இருந்து 26 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து அணியின் சார்பில் சோதி 2 விக்கெட்டுகளும், , டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டுகளும், மற்றும் டிம் சவுதி, ஆடம் மில்னே ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.
newstm.in