தர்மபுரியில் சோகம்..!! தங்கையை காப்பாற்ற தன் உயிரை விட்ட அண்ணன்..!!
தர்மபுரியில் சோகம்..!! தங்கையை காப்பாற்ற தன் உயிரை விட்ட அண்ணன்..!!
தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவருக்கு ரஞ்சித் என்ற 14 வயது மகன் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.ராஜ்குமார் தனது குடும்பத்தினருடன் ஒகேனக்கல்லுக்கு சென்று பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்தனர்.
அதன் பின், ரஞ்சித்தும் அவனது தங்கையும் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். திடீரென தங்கை தண்ணீரில் தத்தளித்ததை பார்த்த ரஞ்சித் உடனே ஆற்றில் குதித்து தங்கையை காப்பாற்றியுள்ளார். தங்கையை காப்பாற்றிய ரஞ்சித்தால் கரையேற முடியவில்லை. நீரில் அடித்துச் செல்லப்பட்டார் பார்த்த உறவினர்கள் கூக்குரலிட்டு அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் பலனில்லை.
தீயணைப்புதுறையின் உதவியுடன் நாடிய குடும்பத்தினரால் ரஞ்சித்தின் உயிரிழந்த உடலை தான் மீட்க முடிந்தது. ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட தங்கையின் உயிரை காப்பாற்றிய அண்ணன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தர்மபுரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்திப்பட்டு வருகிறது