கர்ப்பமாக உள்ள வனத்துறை அதிகாரியை தரையில் தள்ளி கொடூர தாக்குதல்!!

கர்ப்பமாக உள்ள வனத்துறை அதிகாரியை தரையில் தள்ளி கொடூர தாக்குதல்!!

Update: 2022-01-21 07:00 GMT

கர்ப்பிணி வனத்துறை அதிகாரியின் முடியை பிடித்து இழுத்து தரையில் போட்டு தம்பதியர் தாக்குதல் நடத்திய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்ட வனத்துறையில் ரேஞ்சராக பணியாற்றி வரும் பெண் அதிகாரியை, பல்சவாடே கிராம பஞ்சாயத்தின் முன்னாள் தலைவரும், அவரது மனைவியும் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு ஆளான வனத்துறை அதிகாரி மூன்று மாத கர்ப்பமாக இருப்பவர். கர்ப்பிணி என்றும் பாராத அந்த தம்பதியர் இருவரும் சேர்ந்து கொண்டு அந்த வனத்துறை அதிகாரியின் தலைமுடியை பிடித்து இழுத்து தரையில் போட்டு காலால் எட்டி உதைத்தனர்

சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி, வனத்துறையில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை தனது ஒப்புதல் இல்லாமல், அழைத்துச் சென்றதால் ஆத்திரமடைந்த அந்த நபர், மனைவியுடன் சேர்ந்து கொண்டு ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னிலையில் அந்த பெண் அதிகாரியை தாக்கி உதைத்துள்ளார்.


பெண் அதிகாரி இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட தம்பதியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு ஆளான பெண் அதிகாரிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தாக்குதலால் கருவுக்கு  பாதிப்பு ஏதும் ஏற்பட்டதா என கண்டறியப்படும். அதன் முடிவை பொறுத்து தம்பதியர் மீது கூடுதல் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

newstm.in

Similar News