கைக்குழந்தை மீது சானிடைசர் ஊற்றி தீ வைத்த கொடூர தாய்!!

கைக்குழந்தை மீது சானிடைசர் ஊற்றி தீ வைத்த கொடூர தாய்!!

Update: 2022-01-24 06:45 GMT

குடும்ப பிரச்னை காரணமாக கைக்குழந்தை மீது சானிடைசர் ஊற்றி தீ வைத்த தாய், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த வெங்கடேஷ் ராவத் - சுவர்ணா தம்பதிக்கு 7 மாத கைக்குழந்தை இருந்தது. வெங்கடேஷ் ராவத் கொரோனா காரணமாக வேலை இல்லாமல் இருந்துள்ளார்.  இதனால் குடும்பத்தில் அதிக பண பிரச்னை இருந்து வந்தது.

பணப்பிரச்னை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது, ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் ராவத் வீட்டில் இருந்த பாட்டிலை அடித்து உடைத்து வெளியே சென்றுவிட்டார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சுவர்ணா தனது குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். இதையடுத்து குழந்தை மீதும், தன் மீதும் சானிடைசரை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.   70 சதவிகித தீக்காயங்களுடன் சுவர்ணா சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Similar News