மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த BSNL நிறுவனம்  பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்ததால் பொருளாதார சிக்கல்களை களையும் நோக்கில் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம்  அறிவிக்கப்பட்டது. BSNL , 1.76 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வந்த நிலையில்  ஒரே நாளில், 78 ஆயிரத்து, 500 ஊழியர்கள் விருப்ப ஓய்வு மூலம் பணி ஓய்வு பெற்றனர்.

                                                    

அனைத்து  BSNL அலுவலகங்களிலும் 20பேர் வேலை செய்த இடங்களில் தற்போது 6  ஊழியர்களே பணி செய்கின்றனர்.


பல இடங்களில் BSNL அலுவலகங்கள் சொந்த கட்டிடங்களில்  இயங்கி வருகின்றன. ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறிய இடங்களுக்கு அலுவலகங்கள் மாற்றியமைக்கப்பட்டு, குறிப்பிட்ட  கட்டிடங்களை வாடகைக்கு விட  BSNL  நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தற்போது குறைவான வசதியுடன்  செயல்படும் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள்,  BSNL  அலுவலகங்களை வாடகைக்கு எடுக்க போட்டா போட்டி போட்டு  வருகின்றன. திருப்பூர் அவிநாசியில்   BSNL  வாடிக்கையாளர் சேவை மைய கட்டடம் சிறிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

வெவ்வேறு இடங்களில்  இருக்கும்  BSNL  கட்டடங்கள், மற்ற அரசு துறை மற்றும் தனியார்  நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டு வருகின்றன. இதனால், பிஎஸ்.என்.எல் அலுவலகங்களை நோக்கி, வாடகைக்கு எடுக்கும் நோக்கில் பிற அலுவலகங்களுக்காக இடம் பார்க்க கூட்டம் குவிந்து வருகின்றன.

newstm.in

Tags: