சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சியளித்த புத்த துறவிகள்!!
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்பிற்கு பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் வழக்கம் போல் சோதனை செய்தனர். அப்போது புத்த மத குருக்கள் டூடூல் மற்றும் மின்டொ ஆகியோரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்த போது அது போலியானது என்பது தெரிய வந்தது.
சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் இலங்கைக்கு செல்ல முயன்ற புத்த மத குருக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்பிற்கு பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் வழக்கம் போல் சோதனை செய்தனர். அப்போது புத்த மத குருக்கள் டூடூல் மற்றும் மின்டொ ஆகியோரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்த போது அது போலியானது என்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, கடந்த 2007ம் ஆண்டு எல்லை வழியாக இந்தியாவிற்கு வந்த அவர்கள், வட மாநிலங்களில் தங்கியுள்ளனர் பின்னர் போலி பாஸ்போர்ட்டை பெற்றுக் கொண்டு இலங்கைக்கு புனித யாத்திரை செல்ல முயன்ற போது பிடிபட்டுள்ளனர். பிடிபட்ட புத்த குருக்களை கைது செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in