பட்ஜெட் : நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற ரூ.44,000 கோடி நிதி!!
பட்ஜெட் : நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற ரூ.44,000 கோடி நிதி!!
மத்திய பட்ஜெட் 2022 – 23ஐ தாக்கல் செய்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற 44,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அடுத்த நிதியாண்டில் 22,000 கிமீ தொலைவுக்கு சாலை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதாவரி – பெண்ணாறு – காவிரி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.
Use of Kisan Drones to be promoted for crop assessment, digitization of land records, spraying of insecticides and nutrients: FM Nirmala Sitharaman #Budget2022 pic.twitter.com/BUrqBqC1iZ
— ANI (@ANI) February 1, 2022
ஏழைகளுக்கு 18 லட்சம் வீடுகள் கட்ட 48,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு குடிநீர் வழங்க 60,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 – 12ஆம் வகுப்பு வரை மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநில மொழிகளில் பாடம் நடத்த கூடுதலாக 200 கல்வி டிவி சேனல்கள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in