எல்லோரும் பயன்பெறும் பட்ஜெட்.. நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி..!
எல்லோரும் பயன்பெறும் பட்ஜெட்.. நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி..!
“அனைத்து துறைகளின் தேவைகளுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்” என்று, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று (31ம் தேதி) தொடங்கியது. இன்று காலை 11 மணிக்கு, காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
உத்தரபிரதேசம் உட்பட 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களை கவர கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; “அனைத்து துறைகளின் தேவைகளுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.
அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும். விவசாயத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் இன்று பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்” என்றார்.