டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா அபாரம்.. 100 விக்கெட்டுகளை வீழ்த்தினார் !!
டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா அபாரம்.. 100 விக்கெட்டுகளை வீழ்த்தினார் !!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது நூறாவது விக்கெட்டை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதும் 4ஆவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆலி போப்பை வீழ்த்தியதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார் பும்ரா. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றி இருந்தார்.
தனது 24-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். அதோடு அதிவேகமாக, 100 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் பும்ரா படைத்துள்ளார். இந்த ஆட்டதில் தனது 101-வது விக்கெட்டையும் பும்ரா கைப்பற்றி உள்ளார். அவரது வேகம் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் களமிறங்கிய பும்ரா இந்தியாவுக்காக கடந்த 2018 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.
newstm.in