தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் அதிரடி குறைப்பு!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!
சாதாரணப் பேருந்துகளை விட சொகுசுப் பேருந்துகளில் கட்டணம் அதிகம். தற்போது இயக்கப்பட்டு வரும் குளிர்சாதன வசதியுடன் டிஜிட்டல் பேருந்துகள் இன்னும் கட்டணம் அதிகம். தமிழகத்தில் சமீப காலமாக பழைய பேருந்துகள் குறைக்கப்பட்டு அல்லது மேம்படுத்தப்பட்ட சொகுசுப் பேருந்துகளை ஏறக்குறைய 2500 புதிய பேருந்துகள் விடப்பட்டுள்ளன.
சாதாரணப் பேருந்துகளை விட சொகுசுப் பேருந்துகளில் கட்டணம் அதிகம். தற்போது இயக்கப்பட்டு வரும் குளிர்சாதன வசதியுடன் டிஜிட்டல் பேருந்துகள் இன்னும் கட்டணம் அதிகம். தமிழகத்தில் சமீபகாலமாக பழைய பேருந்துகள் குறைக்கப்பட்டு அல்லது மேம்படுத்தப்பட்ட சொகுசுப் பேருந்துகளை ஏறக்குறைய 2,500 புதிய பேருந்துகள் விடப்பட்டுள்ளன.
கட்டண அதிகரிப்பால் பொதுமக்கள் சொகுசுப் பேருந்துகளில் செல்ல ஆர்வம் காட்டவில்லை. பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் குறுகிய தூர விரைவு சொகுசுப் பேருந்துகளில் இன்று முதல் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வரும் 2500 புதிய பேருந்துகளில் சுமார் 700 பேருந்துகள் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்தப் பேருந்துகளில் ரூ25 பெறப்பட்ட கட்டணங்கள் அனைத்தும் ரூ.15ஆக குறைக்கப்பட்டுள்ளன.ரூ15 பெறப்பட்ட கட்டணங்கள் அனைத்தும் ரூ10ஆக குறைக்கப்பட்டிருக்கின்றன.
இன்றே பொதுமக்களுக்கு சென்று சேரும் வகையில் பேருந்துகளில் முன் புறத்தில் ஸ்டிக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டணக் குறைப்பால் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கூடுதலாகும் என போக்குவரத்துக் கழகங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
newstm.in