பள்ளி மாணவியின் படிப்பிற்காக டஜன் மாம்பழத்தை ரூ1,20,000 கொடுத்து வாங்கிய தொழிலதிபர்..!!

பள்ளி மாணவியின் படிப்பிற்காக டஜன் மாம்பழத்தை ரூ1,20,000 கொடுத்து வாங்கிய தொழிலதிபர்..!!

Update: 2021-06-28 21:27 GMT

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த சிறுமி (8). சாலையில் மாம்பழம் விற்றுக் கொண்டிருந்த துளசியைப் பார்த்த செய்தியாளர் ஒருவர் இந்த வயதில் மாம்பழம் விற்பதற்கான காரணம் குறித்து வினவினார். அதற்கு அந்த சிறுமி தனக்கு ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட் போன் தேவைப்படுவதாகவும், ஆனால் போன் வாங்கும் அளவுக்கு தனது தந்தையிடம் வசதி இல்லை என்று கூறினார். அதனால் மாம்பழம் விற்று அதில் கிடைக்கும் பணத்தில் ஸ்மார்ட் போன் வாங்க இருப்பதாக கூறினார்.

சிறுமியின் இந்த பதில் இணையத்தில் வைரலான நிலையில், தொழிலதிபர் நரேந்திர கேட் அந்த சிறுமிக்கு உதவ முடிவெடுத்தார். சிறுமி மாம்பழம் விற்கும் இடத்திற்கு சென்ற அவர் ஒரு மாம்பழம் பத்தாயிரம் ரூபாய் என 12 மாம்பழங்களை 1.20 லட்ச ரூபாய்க்கு வாங்கினார்.

மாம்பழத்திற்கு லட்சம் ரூபாய் கொடுத்ததோடு நில்லாமல், விலையுயர்ந்த மொபைல் போன் ஒன்றையும் 2 வருடத்திற்கு இண்டர்நெட் கட்டணம் செலுத்தி, அந்த சிறுமிக்கு பரிசாக கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இந்த செய்தி தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. தொழிலதிபருக்கு சிறுமியும், அவரது தந்தையும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News