இன்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்..!!
இன்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்..!!
இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. 3 வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்கும் படி மாநில அரசுகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2வது அலை பரவல் வேகம் தணிந்து வரும் சூழலில் இன்று (ஜூன் 30) பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பூசி திட்டத்தை மேலும் விரைவு படுத்துவது குறித்தும் மூன்றாவது அலைக்கான பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதனையடுத்து இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் குழு ஆலோசனை கூட்டமும் நடைபெற இருப்பதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் 2 ஆலோசனை கூட்டமும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.