பிரச்சாரம் எல்லாம் கிடையாது! விஜய் சைக்கிளில் இதுக்காக தான் வந்தாராம்!

பிரச்சாரம் எல்லாம் கிடையாது! விஜய் சைக்கிளில் இதுக்காக தான் வந்தாராம்!

Update: 2021-04-06 19:07 GMT

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் பாதுகாப்பிற்காக துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திரையுலகினர், அரசியல் கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள்  என அனவரும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து தமது ஜனநாயக கடமைகளை ஆற்றி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விஜய், நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடி மையத்திற்கு சைக்கிளில் வந்து வாக்களித்தது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.  சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து, நடிகர் விஜய், சைக்கிளில் புறப்பட்ட போது ரசிகர்கள் கூடி விடக்கூடாது என்பதற்காக, அவருடன் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் இருசக்கர வாகனங்களில் நெருக்கமாக வந்தனர். வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வந்து சேர்ந்ததும், அங்கிருந்த ரசிகர்கள் சிலர் தடுப்புகளையும் மீறி அருகே சென்று செல்பி எடுக்க முயன்றனர்.  பாதுகாப்புக்கு இருந்த போலீசார் ரசிகர்களை அப்புறப்படுத்தியதும், நடிகர் விஜய்  தனது வாக்கை நடிகர் விஜய் பதிவு செய்தார்.

வாக்களித்த பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக அந்த முயற்சியை கைவிட்டு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவரது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்தபடி நடிகர் விஜய் வீடு திரும்பியுள்ளார். இது குறித்து  உதயநிதி ஸ்டாலின் பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையில் நடிகர் விஜய் சைக்கிளில் சென்றிருக்கலாம் தெரிவித்துள்ளார். 

நடிகை குஷ்பு இது குறித்து கூறுகையில், நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பதற்காக விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வதால் நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்ததற்கு எவ்வித அரசியல் காரணங்களும் இல்லை.வேறு எந்த உள்நோக்கமும் இல்லை  என நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பு அதிகாரி ரியாஸ் விளக்கம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News