மும்பை இண்டியன்ஸ் பேட்டிங்கை ஒரு கை பார்த்த சென்னை ஃபீல்டர்கள்- எல்லா புகழும் தோனிக்கே..!
மும்பை இண்டியன்ஸ் பேட்டிங்கை ஒரு கை பார்த்த சென்னை ஃபீல்டர்கள்- எல்லா புகழும் தோனிக்கே..!
மும்பை இண்டியன்ஸ் கனவை சிதறடிக்கும் விதமாக சென்னை அணியின் ஃப்லீட்டிங்கை வலிமைப்படுத்திய தோனிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
துபாயில் நடந்து முடிந்த ஐபிஎல் 20201 லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மண்ணை கவ்வியது. தொடக்கத்தில் அந்த அணி ஆதிக்கம் செலுத்தினாலும், போட்டியின் இரண்டாம் பாதி ஆட்டத்தில் சென்னை அணி வீறு கொண்டு எழுந்தது.
வந்த வேகத்தில் டு பிளசிஸ், ரெய்னா, மொயின், அலி, தோனி என்று வரிசையாக சென்னை அணியின் ஆட்டக்காரர்கள் ஆட்டமிழக்க தொடங்கினார். அப்போது களமிறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட் விளாசி தள்ளினார். அவருடைய ஆதிரடி ஆட்டம் போட்டியின் போக்கை திசை திருப்பியது.
மொத்த இன்னிங்கிஸையும் மாற்றும் விதத்தில் அவருடைய பேட்டிங் அருமையாக இருந்தது. இதனால் சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்தது. நேற்றைய ஆட்டத்தில் ருத்துராஜின் ஆட்டம் முதல் திருப்பம் என்றால், அடுத்த திருப்பத்தை ஏற்படுத்தியவர் சாட்சாத் தோனி தான்.
முதல் ஓவரில் இருந்தே சிஎஸ்கே திட்டமிட்டு ஆடியது நன்றாக தெரிந்தது. அத்தனையும் தோனியின் பிளானிங் தான். மும்பை ஆட்டக்காரர்களின் பந்துகள் சிதறிவிடாத படி ஃப்லீட்டிங் ஒரு அரணை அமைத்தார் அவர். சூர்யா குமார் யாதவுக்கு போடப்பட்ட பீல்டிங், இஷான் கிஷான் வந்ததும் பிராவோவை களமிறக்கினார் தோனி. அடுத்து ஷார்ட் மிட் ஆனில் சரியாக ரெய்னாவை களமிறக்கியதால் விக்கெட் சென்னைக்கு கிடைத்தது.
அச்சுறுத்தலாக இருந்த கைரன் பொல்லார்ட்டுக்கு ஜடேஜா மூலம் சோதனை நடந்தது. ஆனால் அது எடுபடவில்லை. அடுத்ததாக ஹஸல்வுட் பவுலிங் போட்டார். இதில் எல்.பி.டபுள்யூ காரணமாக கைரன் அவுட்டானார். இது ஆட்டத்தின் இரண்டாம் திருப்பமாக அமைந்தது. அவர் மட்டும் ஆடியிருந்தால் மும்பை எளிதாக வென்றிருக்கும் என்பதே உண்மை.
அவரை தொடர்ந்து அடுத்தடுத்து வந்த மும்பை அணி வீரர்கள் சிறியளவில் ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். சோரப் திவாரி மட்டுமே ஆமை வேகத்தில் இன்று ஆடி 50 ரன்கள் எடுத்தார்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு வெறு 136 ரன்களை மட்டுமே மும்பை அணியால் எடுக்க முடிந்தது. இதன்காரணமாக சி.எஸ்.கே கேப்டன் தோனி தரமான பிளானிங் மூலமாக மும்பையை பழி தீர்த்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.