“முறைகேடுகளை தடுக்க நேர்காணலை ரத்து செய்யுங்க..!” - அன்புமணி ராமதாஸ்

“முறைகேடுகளை தடுக்க நேர்காணலை ரத்து செய்யுங்க..!” - அன்புமணி ராமதாஸ்

Update: 2021-06-28 16:35 GMT

“அரசுப் பணிகளுக்கான நேர்காணல்களில் பெருமளவு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுவதால்,  நேர்காணலை ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்” என, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஆந்திராவில், அரசுப் பணியாளர் தேர்வில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், முறைகேடுகளைத் தடுக்கவும் குரூப் -1 பணிகள் உள்ளிட்ட அனைத்து அரசுப் பணிகளுக்கும் நடத்தப்பட்டு வந்த நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க சிறப்பான முடிவாகும்.


தமிழ்நாட்டிலும் அரசுப் பணிகளுக்கான நேர்காணல்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், தமிழகத்திலும் அனைத்து நிலை அரசுப் பணிகளுக்கும் நேர்காணலை ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.

எழுத்துத் தேர்வுகளில் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் அனைத்துப் பணிகளுக்கும் தகுதியானவர்களை தேர்வு செய்வதுதான் சரியாக இருக்கும்; வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்; முறைகேடுகளைத் தடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News