சுங்கச்சாவடி கட்டணம் ரத்து - ஃப்ரீயாக போய் வரும் வாகனங்கள்!
மதுரையில் உள்ள வண்டியூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க உயர்நீதமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. வண்டியூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி நெடுஞ்சாலை ஆணைய விதிகளை மீறி இருப்பதாக புகார் எழுந்தது. மேலும் 27 கிமீ தூர இடைவெளியில் மூன்று சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
மதுரையில் உள்ள வண்டியூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க உயர்நீதமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.
வண்டியூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி நெடுஞ்சாலை ஆணைய விதிகளை மீறி இருப்பதாக புகார் எழுந்தது. மேலும் 27 கிமீ தூர இடைவெளியில் மூன்று சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். ஆம்புலன்ஸ் செல்ல தனிவழி இல்லை என்றும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் அடிப்படை வசதிகள் செய்துதரும் வரை வாகனங்கள் சுங்கக்கட்டணம் செலுத்த தேவையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து வண்டியூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்று வருகின்றன. நீதிமன்ற உத்தரவின்படி அடிப்படை வசதிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என மாநில நெடுஞ்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
newstm.in