மாா்ச் 7ல் வேட்பாளா் பட்டியல் அறிவிப்பு.. கமல்ஹாசன் அதிரடி !!

மாா்ச் 7ல் வேட்பாளா் பட்டியல் அறிவிப்பு.. கமல்ஹாசன் அதிரடி !!

Update: 2021-02-28 15:20 GMT

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளா் பட்டியல் மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டை உறுதி செய்து வருகிறது. இந்நிலையில், கமல்ஹாசன் தலைமையில் மூன்றாவது அணி அமைக்கும் பணியை அவர் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, சட்டப்பேரவைத் தோ்தலில் மநீம சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனு அளித்துள்ளனா். என்னுடைய தலைமையில் மார்ச் 1ஆம் தேதி வேட்பாளா் நோ்காணல் நடைபெறும். பின்னர் மார்ச் 7ஆம் தேதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும் என அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், எங்கள் கூட்டணிக்கு மேலும் பல்வேறு கட்சிகள் வரலாம். அப்படி வந்தாலும் முதல்வா் வேட்பாளராக நான்தான் இருப்பேன். நாங்கள் யாருடனும் சமரசம் செய்துகொள்ளும் கட்சி இல்லை. வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

மேலும் சரத்குமார் சந்தித்தது தொடர்பான கேள்விக்கு அவர் பதில் அளித்தார். அதில், சரத்குமாரின் கட்சி கூட்டணியில் இடம்பெறுமா என்பதை விரைவில் கூறுவேன். மேலும் மார்ச் 3ஆம் தேதி முதல் மீண்டும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளேன் என்றார்.
 

newstm.in

Tags:    

Similar News