வேட்பாளர்கள் செலவு செய்த பணத்தை உடனடியாக வழங்க உத்தரவு - விஜயகாந்த்!
வேட்பாளர்கள் செலவு செய்த பணத்தை உடனடியாக வழங்க உத்தரவு - விஜயகாந்த்!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடத்தப்பட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரபிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்தனர். அந்த வகையில் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக அமமுகவுடன் கூட்டணி அமைத்து, 59 இடங்களில் போட்டியிட்டுள்ளது. தேமுதிக வேட்பாளர்களுக்கு கட்சி சார்பில் நிதி எதுவும் அளிக்கப் படாதததால், தங்களது சொந்த பணத்தை செலவு செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர். இதனால் தேமுதிக வின் பெரும்பாலான வேட்பாளர்கள் கடன் வாங்கி செலவு செய்ததாக கட்சித் தலைமையான விஜயகாந்த்திடம் தெரிவித்தனர்.
தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தலில் தேமுதிக வேட்பாளர்கள் செலவு செய்த பணத்தை கணக்கிட்டு, உடனே வழங்குமாறு தலைமை நிர்வாகிகளுக்கு கட்சித் தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில், தேமுதிக வேட்பாளர்கள் தேர்தலில் செலவு செய்த தொகைகள் அனைத்தும் கணக்கிட்டு அளிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த்தின் இந்த செயல் கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தேமுதிக வேட்பாளர்கள் விடுத்த செய்திக்குறிப்பில் , ‘‘எங்கள் கோரிக்கையை ஏற்று,வேட்பாளர்கள் செலவு செய்த பணத்தை உடனடியாக வழங்க கட்சித் தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். ‘என்னால் யாரும் எதையும் இழக்க வேண்டாம்’ எனவும் அறிவித்திருப்பதும் அறிவித்த படியே வேட்பாளர்கள் அனைவருக்கும் முழு தொகையும் வழங்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளனர்.
newstm.in