“இனியும் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது” : சசிகலா

“இனியும் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது” : சசிகலா

Update: 2021-12-05 09:32 GMT

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவோருக்கான வேட்புமனு தாக்கல் செய்ய அதிமுக அலுவலகம் வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு சசிகலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் .பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், வேட்பு மனு வாங்க சென்றவர்கள் அதிமுக தொண்டர்களால் தாக்கப்பட்டனர்.  இந்நிலையில், தொண்டர்கள்மீது விழும்ஒவ்வொரு அடியும்ஒட்டுமொத்த கழக உடன்பிறப்புகளின்மீது விழுந்த அடியாகவும்‌, என்மீது விழுந்த அடியாகவும்தான்நான்நினைக்கிறன் என்று சசிகலா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில்உள்ள அனைத்து அரசியல்கட்சியினரும்பார்த்து பொறாமை படும்அளவுக்கு ஒளிர்ந்த நம்இயக்கத்தின்இன்றைய நிகழ்வுகளைப்பார்க்கும்போது ஒவ்வொரு தொண்டனும்வெட்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

என்றைக்கு நம்புரட்சித்தலைவி நம்மை விட்டு சென்றார்களோ அன்று முதல்இன்று வரை நம்இயக்கத்தில்நடைபெறும்செயல்களை பார்க்கும்போது என்மனது மிகவும்வேதனைப்படுகிறது என தெரிவித்துள்ளார். 

இன்று, நம்தொண்டர்களின்நிலையை இருபெரும்தலைவர்களும்கண்ணீரோடுதான்பார்த்துக்கொண்டு இருப்பார்கள்‌. அவர்கள்கட்டி காத்த இந்த இயக்கத்தை சிரழித்துவிடாதீர்கள்‌. இனியும்இதை எல்லாம்பார்த்துக்கொண்டு என்னை போன்றவர்களால்சும்மா இருக்க முடியாது.

ஒரு தலைமையால்தான்அந்த வலியை உணரமுடியும்‌. ஆணிவேரான தொண்டர்கள்இருந்தால்தான்இந்த இயக்கம்ஆலமரமாக தழைத்தோங்கும்‌. இதை ஒவ்வொருவரும்மனதில்வைத்து, நம்தலைவர்கள்காட்டிய வழியில்‌, ஒற்றுமையுடன்இருந்தால்தான்வரும்நாட்களில்‌, நம்எதிரிகளை வெல்ல முடியும்என்பதன்அவசியத்தை உணர்ந்தாக வேண்டும்என்று கேட்டு கொள்கிறேன்‌. என சசிகலா தெரிவித்துள்ளார்.

newstm.in

Similar News