ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பிய கேப்டன் வருண் சிங்.. திடீரென வேறு மருத்துவமனைக்கு மாற்றம் !!
ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பிய கேப்டன் வருண் சிங்.. திடீரென வேறு மருத்துவமனைக்கு மாற்றம் !!
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த கேப்டன் வருண் சிங், பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளைபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர், கோவை மாவட்டம் சூலூரில் இருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டனுக்கு ராணுவ ஹெலிகாப்டரில் சென்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மலைப்பகுதியில் மரத்தில் மோதிநேற்று ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது. இதில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் அடைந்தார். அவருடன் பயணித்த அவரது மனைவி உட்பட மேலும் 12 பேரும் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர் தப்பினார். இந்த கோர விபத்து இந்தியாவையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த விமானத்தில் பயணித்த குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூர் அழைத்து செல்லப்பட்டார். தற்பொழுது கேப்டன் வருண் சிங் பெங்களூர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
newstm.in