குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்திருக்கும் ஒரே ஒரு நபரான கேப்டன் வருண் சிங், 80 சதவீத தீக்காயங்களுடன் பெங்களூருவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து லெப்டினன்ட் ஜெனரல் அருண் மற்றும் மருத்துவமனை தரப்பு இன்று பேசியுள்ளனர்.

லெப்டினன்ட் ஜெனரல் அருண் பேசுகையில், “குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது. பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.


தீக்காயங்கள் என்பதால், வருண் சிங்குக்கு தோல் மாற்று சிகிச்சைகள் நடைபெற்று வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகத்திலிருந்து தோல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags: