வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரிய கோவிலினுடைய குடமுழுக்கு விழா பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தஞ்சை பெரிய கோயிலில், தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், எனவே அதற்கு தடை விதிக்கவும் வழக்கறிஞர் சரவணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்தார். 
தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

                                                                           

தஞ்சை பெரிய கோயில் தொல்லியல் துறையின் சின்னமாக விளங்குகிறது. தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் குடமுழுக்கு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  எனவே குடமுழுக்கு விழாவை நடத்த தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் சரவணன் கோரினார். இதையடுத்து நீதிபதிகள் தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு நிகழ்வு தொடர்பான அனைத்து வழக்குகளையும் நாளை ஆஜராகி தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று கூறி வழக்குகளைநாளைக்கு விசாரிப்பதாக ஒத்திவைத்தனர்.

newstm.in

Tags: