தேவையின்றி வெளியே சுற்றினால் வழக்குப்பதிவு.. காவல்துறை எச்சரிக்கை !!
தேவையின்றி வெளியே சுற்றினால் வழக்குப்பதிவு.. காவல்துறை எச்சரிக்கை !!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படுவேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமுள்ளது. இதனால் பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு, பகுதிநேர ஊரடங்கு அறிவித்து வருகிறது.
அந்த வகையில், டெல்லியில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருவதாக காவல் ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா எச்சரித்துள்ளார்.
டெல்லியில் நாள்தோறும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லியில், இரவு நேரம் மற்றும் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று வார இறுதி நாள்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
இதனால் டெல்லியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது இது தொடர்பாக விளக்கம் அளித்த டெல்லி காவல் ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா, வார இறுதி ஊரடங்கு உத்தரவை போலீசார் கடுமையாக அமல்படுத்துயுள்ளனர். தேவையில்லாமல் தங்கள் வீட்டைவிட்டு வெளியே வருபவர்கள் மீது வழக்குத் தொடரப்படுகிறது.
வார இறுதி ஊரடங்கு உத்தரவை அனைத்து மக்களும் கடைபிடிக்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன். வீட்டில் இருந்தால் எந்த பிரச்சனையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
newstm.in