சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி இன்று அறிவிப்பு..!

சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி இன்று அறிவிப்பு..!

Update: 2021-07-20 12:05 GMT

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல் நேற்று வெளியான நிலையில் சிபிஎஸ்இ 10-ம் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிப்பெண்கள் கணக்கிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஜூலை 20-ஆம் தேதி, அதாவது இன்று சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளுக்கான தேதியும், அதை தொடர்ந்து 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கான தேதியும் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதனால் தேர்வு எழுதி காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளனர்.

Tags:    

Similar News