வறுத்த உருளைக்கிழங்கை சாப்பிட மாதம் ரூ.50,000 சம்பளம்- பிரபல ஹோட்டல் அறிவிப்பு !

வறுத்த உருளைக்கிழங்கை சாப்பிட மாதம் ரூ.50,000 சம்பளம்- பிரபல ஹோட்டல் அறிவிப்பு !

Update: 2021-09-06 18:24 GMT

வறுத்த உருளைக்கிழங்கு டேஸ்ட் எப்படி இருக்கிறது என கூறுவதற்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என பிரபல உணவகம் அறிவிப்பு வெளியிட்டு அதிரவைத்துள்ளது.

இங்கிலாந்து நாட்டிலுள்ள தி பாட்டனிஸ்ட் என்ற உணவகம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தங்கள் உணவகம் சுவையான வறுத்த உருளைக்கிழங்கை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டுள்ளது.

இதற்காக தயார் செய்யப்படும் வறுத்த உருளைக்கிழங்கை சுவைத்துப் பார்க்கும் வேலைக்கு ஆட்களை தேடி வருகிறது. இதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் மாதம்   ரூபாய் 50 ஆயிரம் வரை சம்பளம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு சுவையான உணவை கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த பணிக்கு ஆள் எடுக்க இருப்பதாகவும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 10ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு செய்துள்ளது. 

இதனை அடுத்து ஏராளமானோர் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சுவை பார்ப்பதற்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளமா என பலரும் அதிர்ந்துபோய் உள்ளனர்.

newstm.in

   

Tags:    

Similar News