பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு செல்போன்.. வித்தியாசமாக யோசிக்கும் தெலுங்கானா அரசு !

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு செல்போன்.. வித்தியாசமாக யோசிக்கும் தெலுங்கானா அரசு !

Update: 2021-06-12 06:15 GMT

கொரோனா பாதிப்புக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவசரகால எண்களுடன் மொபைல் போன்கள் வழங்கப்படும் என தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2ஆவது அலை கணிக்க முடியாத அளவுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டன. வயது வித்தியாசமின்றி பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை என அனைத்து தரப்பினரும் தொற்றுக்கு ஆளாகினர். இதனால் உலக அளவில் தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடம் வசித்தது.

ஆனால் அதன்பின்னர் ஊரடங்கு விதிக்கப்பட்டு தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தாண்டு கொரோனா பாதிப்பு தற்போது குறைந்தாலும் என்றும் வலியை தரக்கூடிய பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டு சென்றிருக்கிறது என்றே கூறலாம். ஒரே குடும்பத்தில் இரண்டு பேர், மூன்று பேர் எனவும் உயிரிழந்துள்ளனர்.

இதில், கணவன், மனைவி என இருவருமே உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன.  இதனால், அவர்களது குழந்தைகள் ஆதரவின்றி தவிக்கும் சூழல் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த மத்திய, மாநில அரசுகள் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி, நிதியுதவி உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளன.

இந்நிலையில், தெலுங்கானாவில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோரின் குழந்தைகளுக்கு உதவும் வகையில், அவர்களுக்கு அவசரகால எண்களுடன் மொபைல் போன்கள் வழங்க மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நல துறை முடிவு செய்துள்ளது.

இந்த எண்களை கொண்டு, அவர்கள் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியும்.  யாரை தொடர்பு கொள்ள வேண்டும்.  தொடர்புடைய அதிகாரிகளுடன் எப்போது பேச வேண்டும் என்பது பற்றி குழந்தைகளுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

Tags:    

Similar News