செல்போன் போதும்.. ஆதாரில் நீங்களே மாற்றம் செய்யலாம் !!

செல்போன் போதும்.. ஆதாரில் நீங்களே மாற்றம் செய்யலாம் !!

Update: 2021-07-13 19:35 GMT

ஆதார் அட்டையில், தேவைப்படும் அனைத்து மாற்றங்களையும் செல்போன் குறுஞ்செய்தி மூலம் நாம் செய்துகொள்ள முடியும் என யுஐடிஏஐ எனப்படும் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான ஓர் அடையாள அட்டையாகக் கருதப்படுகிறது ஆதார் அட்டை. அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கும், பல்வேறு ஆவணங்களைப் பெறுவதற்கும், பல்வேறு ஆவணங்களுக்கு மாற்றாகவும் ஆதார் அட்டை பயன்படுகிறது. 

ஆதார் அட்டை நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வப்போது அதில் சிறு சிறு மாற்றங்களை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது செல்போன் எண் மாற்றம், பெயர், முகவரி மாற்றம் உள்ளிட்ட சிறிய மாற்றங்கள் என்றாலும் அதற்கான நெட் சென்டரை நோக்கி மக்கள் செல்லும் நிலை உள்ளது. 

இந்த நிலையில் மக்களே தாங்கள் செல்போன் மூலம் ஆதார் அட்டையில் அனைத்து மாற்றங்களையும் செய்யும் வகையிலான அமைப்பை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதாவது செல்போன் குறுஞ்செய்தி மூலம் ஆதார் அட்டையில் மாற்றம் செய்துகொள்ள முடியும் என யுஐடிஏஐ எனப்படும் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளது.
 

newstm.in
 

Tags:    

Similar News