1000 ரூபாய்க்காக காதலர்களை மிரட்டி செல்போன், பணம் பிடுங்கிய எஸ்.ஐ.
கோவையில் காதலர்களிடம் போலீஸ் என பொய் கூறி மிரட்டி பணம் பறித்து வந்த நபர் சிக்கினார். விருதுநகர் மாவட்டம் சூரங்குடியை சேர்ந்த பாண்டிகுமார் என்பவர், கோவை சரவணம்பட்டி என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது உதவி ஆய்வாளர் சீருடையில் நின்றுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர்,
கோவையில் காதலர்களிடம் போலீஸ் என பொய் கூறி மிரட்டி பணம் பறித்து வந்த நபர் சிக்கினார்.
விருதுநகர் மாவட்டம் சூரங்குடியை சேர்ந்த பாண்டிகுமார் என்பவர், கோவை சரவணம்பட்டி என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது உதவி ஆய்வாளர் சீருடையில் நின்றுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், பாண்டிகுமாரின் பைக் வழிமறித்துள்ளார். அவரிடம் ஆர்சி புக், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களையும் கேட்டுள்ளார். ஆவணங்கள் சரியாக இருந்த போதிலும் அவரிடம் பணம் பறிக்கின்ற நோக்கில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்துவதாக மிரட்டி, ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டதாக கூறப்படுகிறது.
newstm.in