நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது புதிய உச்சமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 92 ரூபாயை தாண்டிவிட்டது. பல நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயானது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வாகன ஓட்டிகளுக்கு ஆறுதல் தரும் செய்தியை எச்டிஎஃப்சி வங்கி புதிய தகவல் ஒன்றை அதிரடியாக வெளியிட்டுள்ளது. அதாவது 50 லிட்டர் வரை பெட்ரோல் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதற்காக indIan oil credit card என்ற கார்டை எச்டிஎஃப்சி வங்கி வழங்குகிறது.

அதனைப் பெறுவதற்கு அடிப்படைத் தகுதி மாத ஊதியம் 12,000 ரூபாயாக இருக்க வேண்டும், மேலும் 21 முதல் 60 வயதுக்குள், சுயதொழில் செய்வோர் 65 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே போல், இந்தியன் ஆயில் கிரெடிட் கார்டை பெறுவதற்கு எச்டிஎஃப்சி வங்கியின் கிளை அல்லது வங்கி இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இதுதவிர இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களிலும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டள்ளது. அதேநேரத்தில் இந்த கார்ரை பயன்படுத்தி பெட்ரோல் மற்றும் டீசல் மட்டுமல்லாமல் வணிக வளாகங்கள், ஷாப்பிங் மற்றும் பில் கட்டணம் ஆகியவற்றுக்கும் இந்தியன் ஆயில் கிரெடிட் கார்டை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


newstm.in

Tags: