சென்னையில் கட்டுப்பாடுகளை அதிகரிங்க.. தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..!

சென்னையில் கட்டுப்பாடுகளை அதிகரிங்க.. தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..!

Update: 2021-12-31 05:55 GMT

தமிழகத்தில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழக மருத்துவத் துறை செயலருக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது, டிசம்பர் முதல் வாரத்தில் 1,088 ஆக இருந்தது.


இது, 4வது வாரத்தில் 1,720 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த 2 வாரங்களில் சென்னையில் திடீரென கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. இதை சுட்டிக்காட்டி மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.  தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் வலியுறுத்தி உள்ளது.

சென்னையில், கொரோனாவுக்கான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை, தடுப்பூசி போடுதல் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News