தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் !

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் !

Update: 2022-01-24 17:07 GMT

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கனமழை தொடர்ந்து பெய்துவந்த நிலையில் சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன்பின்னர் மழை குறைந்து வெயில் அடித்துவருகிறது. அவ்வப்போது மழை பெய்யும் நிலையில், தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. 
இந்த நிலையில், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 

நாளை மறுநாள் (26-01-2022) தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
அதுவே, வரும் 27ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், அரியலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 

வரும் 28ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், அரியலூர், திருச்சி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். அதேநேரத்தில், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
newstm.in

Similar News