சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!!
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!!
ஜனவரி 1 முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் வருகின்ற 2022 ஜனவரி மாதம் முதல் வார நாட்களில் (திங்கள் முதல் சனி வரை ) வழக்கம் போல் காலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை இயக்கப்படும்.
அதேபோல் நெரிசல்மிகு நேரங்களில் காலை 08.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
2022 ஜனவரி மாதம் முதல் மெட்ரோ இரயில் சேவைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல் காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்
அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை இயக்கப்பட்டு வந்த மெட்ரோ இரயில் வரும் 2022 முதல் காலை 05:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும் இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in